தமிழர் பகுதியில் மது போதையில் அரச பேருந்தை செலுத்திய சாரதி ; நள்ளிரவில் பாடம் புகட்டிய மக்கள்
குடிபோதையில் CTB பேருந்தை செலுத்திய பஸ் சாரதி பயணிகளால் நள்ளிரவில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மதுபோதை
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்தின் சாரதி, மிகவும் ஆபத்தான முறையிலும் மதுபோதையிலுமே பேருந்தைச் செலுத்துவதாகப் பயணிகள் சந்தேகித்துள்ளனர்.
இதனால் அச்சமடைந்த பயணிகள், பேருந்தை உடனடியாக நிறுத்துமாறு சாரதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பேருந்தை நிறுத்தச் செய்த பயணிகள், சாரதியை கீழே இறக்கியதுடன், இது குறித்து உரிய அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
பயணிகளின் இந்தத் துரித நடவடிக்கையினால் ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.