பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொரோனா தடுப்பு மருந்தின் பூஸ்டர் டோஸை செலுத்திக் கொண்டார்.
ஒமிக்ரோன் வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் நேற்றில் இருந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில்,
‘‘முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று BoosterDose எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள்.
தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம். நாட்டையும் காப்போம் என பதிவிட்டுள்ளார்.