அதிகாரிகளை ஏமாற்றி ஒரே டிக்கெட்டில் இருவர் பயணம் ; லண்டன் வாழ் புலம்பெயர் தமிழருக்கு நேர்ந்த கதி!
லண்டனைச் சேர்ந்த புலம்பெயர் இலங்கைத் தமிழர் ஒருவர் , தனது விமானப் பயணச் சீட்டைப் பயன்படுத்தி 25 வயதான இலங்கை தமிழ் இளைஞனை ஒருவரை லண்டனுக்குப் பயணிக்க உதவியதால் சிக்கலில் மாட்டியுள்ளார்.
குறித்த லண்டன் வாழ் இலங்கைதமிழர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மற்றையவர் இங்கிலாந்தில் தடுத்து வைக்கப்பட்டு, விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உறவினருக்கு உதவபோய் சிக்கல்
இங்கிலாந்து பயணியின் போர்டிங் பாஸைப் பயன்படுத்தி பெங்களூரு விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் பறந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர் .
லண்டனுக்கான போர்டிங் பாஸ், விமான நிலைய கழிவறையில் சிங்கப்பூர் செல்லவிருந்த பயணியிடம் ரகசியமாக கைமாற்றப்பட்ட போதும் , அவர்களின் இங்கிலாந்து திட்டம் தோல்வியடைந்தது, கடந்த வாரம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பல விதிமீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இருவரும் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு லண்டனைச் சேர்ந்த புலம் பெயர் இலங்கையர் , தனது போர்டிங் பாஸைப் பயன்படுத்தி இலங்கை வாழ் தமிழர் ஒருவரை லண்டனுக்குப் பயணிக்க உதவியுள்ளார்.
லண்டன்வாழ் நபர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக சென்றவர் இங்கிலாந்தில் தடுத்து வைக்கப்பட்டு, விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார்.
திங்களன்று பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலைய காவல்துறையிடம் ஒரு குடிவரவு அதிகாரி தாக்கல் செய்த முறைப்பாட்டை அடுத்து சட்டவிரோத பயணம் குறித்த தகவல்கள் அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.
அவரது கடவுச்சீட்டைச் சரிபார்த்தபோது, சுற்றுலா விசாவில் இந்தியா வந்திருப்பதும், பல சுற்றுலாத் தலங்கள் மற்றும் புனித யாத்திரை இடங்களுக்குச் சென்றிருப்பதும் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.
இங்கிலாந்தில் நாடு கடத்தப்படும் அபாயம்
ஞாயிற்றுக்கிழமை காலை 7.20 மணிக்கு லண்டனுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இருப்பினும், அவர் அந்த விமானத்தில் ஏறவில்லை. குடிவரவு அதிகாரிகள் போர்டிங் பாஸ் விவரங்களை சரிபார்த்தபோது, மற்றொரு நபர் ஏற்கனவே அவரின் பாஸைப் பயன்படுத்தி பயணம் செய்திருப்பது தெரியவந்தது.
விசாரணையின் போது, லண்டன் வாழ் நபர் , 25 வயதான இலங்கை தமிழ் இளைஞனை சட்டவிரோதமாக லண்டனில் தரையிறங்க உதவ திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. புலம் பெயர் தமிழர் லண்டனில் ஹோட்டல் தொழில் செய்து வருவதாகவும், 30 ஆண்டுகளாக லண்டனில் குடியேறியுள்ளதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் லண்டன் வாழ் புலம் பெயர் தமிழர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகின்றது.
மேலும் லண்டனில் உள்ள தங்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த நிலையில், இங்கிலாந்து அதிகாரிகள் மற்றிய 25 வயதான இலங்கை தமிழ் இளைஞனை தடுத்து வைத்து, அவரை இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.