பொலிஸாரால் தேடப்படும் இளைஞன்!
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கடத்தல்காரர் ஒருவரை கைதுசெய்ய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தல்காரரின் புகைப்படம்
தெவிநுவர பகுதியைச் சேர்ந்த லோஸ் பட பெதிகே சந்துன் வெலான் என்ற இளைஞனே இவ்வாறு பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.
இதனால் பொதுமக்களிடம் உதவி கோரி, குறித்த போதைப்பொருள் கடத்தல்காரரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படத்தில் உள்ள இளைஞன் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் 071 859 1876 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.