தினுஷ லக்ஷான் தாக்கப்பட்ட விவகாரம்; போதைபொருள் விவகாரம் என்கின்றது பொலிஸ்!
போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையே கண்டியில் குத்துச்சண்டை வீரர் தினுஷ லக்ஷான் தாக்குதலுக்கு இலக்கானமைக்கான காரணம் என கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குத்தச்சண்ணடை வீரர், 10கிராம் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் தினுஷ லக்ஷான் கைதுசெய்யப்பட்டு, அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கடத்தப்பட்டு தாக்குதல்
தாக்குதலுக்கு இலக்கானவர் இந்த மாதம் 12ஆம் திகதி இரவு 8 மணியளவில் கண்டி வைத்தியசாலை லேனிலுள்ள தனது வீட்டுக்கு அருகில் வைத்து, ஓட்டோவொன்றில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.
கடத்திச் செல்லப்பட்டிருந்த தினுஷ லக்ஷான் ஹந்தானை பகுதியிலுள்ள பாழடைந்த இடமொன்றுக்கு அருகிலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேசமயம் இளைஞனின் தாய்க்கு எதிராகவும் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் போகம்பர பிரதேசத்திலுள்ள போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் குழுவால் தினுஷ லக்ஷான் கடத்திச் செல்லப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதென்றும் அவர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
மூன்று வயது மகன் மீது விழுந்த தந்தை ; இறுதியில் வீட்டிற்குள் நடந்த அசம்பாவிதம் ; பறிபோன பிஞ்சு உயிர்
சுவிஸிலிருந்து நீண்ட காலத்தின் யாழ் வந்தவருக்கு நடத்தப்பட்ட கொடூரத்தால் பரபரப்பு ; பணத்துக்காக இப்படியா?