அவுஸ்திரேலியாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, மெல்பேர்னுக்கான வாராந்த விமான சேவைகளை மேலும் மூன்றாக அதிகரிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
தலையில் 14 தையல்கள் ; உயிருக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் சத்தரதன தேரர் ; ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை
இந்த அதிகரிப்பு எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் கூட்டுத்தாபனத் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மெல்பேர்னுக்கு வாராந்தம் 10 விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், சிட்னிக்கான வழக்கமான நான்கு விமான சேவைகளும் தொடரும்.
இதன் மூலம் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் வாராந்த விமான சேவைகளின் எண்ணிக்கை 14ஆக அதிகரிக்கவுள்ளது.
கூடுதலாக இணைக்கப்படும் மெல்பேர்னுக்கான விமானங்கள் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுநாயக்கவிலிருந்து புறப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.