புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் சிறீதரன் வலிறுத்து
இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம், நவீன உலக ஒழுங்கோடு பொருந்தும் அறிவியல்பூர்வம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்று (22) பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில், புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பான உபகுழுவின் முதலாவது கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது, அவர் இதை கூறினார்.
இவர் மேலும் கூறுகையில், கல்வி மாணவர்களுக்கு சுமையாக இல்லாத வகையில் அமைக்கப்பட வேண்டும். முன்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை புத்தாக்கத்துடன் கூடிய கல்வி முகாமைத்துவம் தேவை.
முன்பள்ளிக் கல்வி ஆசிரியர்களின் சம்பள மறுசீரமைப்பு மற்றும் நிர்வாக பொறுப்பு மாகாண கல்வி அமைச்சுகளுக்குச் செல்ல வேண்டும்.
ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல், மாணவர்களுக்கு எளிதாக கற்பதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஓப்படை முறைமை (Module System) அமல்படுத்தப்படுவதால், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் முக்கியத்துவம் மேம்படுத்தப்பட வேண்டும். என அவர் வலியுறுத்தினார்.