இலங்கையில் அதிகரிக்கும் மின்சார கட்டணம்
இலங்கையின் மின்சாரா கட்டணத்தை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் வீதம்
இதற்கமைய நூற்றுக்கு 30 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகவே அரசாங்கம் மின் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஏற்கனவே நூற்றுக்கு 75 வீத மின் கட்டண அதிகரிப்பை மேற்கொண்டுள்ள போதிலும், மேலும் 30 வீத கட்டண அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என ரஞ்சன் ஜயலால் தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியை மின் கட்டணத்திற்கு அறவிடுவதன் வாயிலாக மின்கட்டணம் மறைமுகமாக இங்கு அதிகரிக்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இது தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜயசேகரவை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை.