கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ விருது; வழங்கினார் ஜனாதிபதி!

Karu Jayasuriya Ranil Wickremesinghe Independence Day
By Sulokshi Feb 03, 2023 12:13 PM GMT
Report

   இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் சபாநாயகரும் அரசியல்வாதியுமான கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார் .

விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கரு ஜயசூரிய தேசத்திற்கு ஆற்றிய, சிறந்த சேவையைப் பாராட்டி அவருக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ விருது வழங்கப்பட்டது.

கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ விருது; வழங்கினார் ஜனாதிபதி! | Sri Lankaphimani For Karu Jayasuriya

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கரு ஜயசூரிய அவர்களுக்கு பதக்கம் அணிவித்து விருது வழங்கி கௌரவித்தார்.

நிகழ்வின் போது ‘கரு ஜயசூரியவின் பெருமைமிக்க வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகள்’ எனும் நினைவுப் புத்தகத்தை கரு ஜயசூரிய ஜனாதிபதியிடம் வழங்கி வைத்தார்.

‘ஸ்ரீ லங்காபிமானி’ 

வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் ‘ஸ்ரீ லங்காபிமானி’ எனும் கெளரவ விருதானது இலங்கைப் பிரஜை மற்றும் இலங்கையர் அல்லாத ஒருவருக்கு இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் மிக உயர்ந்த தேசிய விருதாகும்.

கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ விருது; வழங்கினார் ஜனாதிபதி! | Sri Lankaphimani For Karu Jayasuriya

இந்த விருதை ஒரே நேரத்தில் ஐந்து இலங்கையர்கள் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும், அதாவது விருதைப் பெற்ற ஐந்து பேர் உயிருடன் இருந்தால், ஆறாவது நபருக்கு விருதை வழங்க முடியாது.

எனினும் விருது பெறுபவரில் ஒருவர் மரணித்திருந்தால் மேலுமொரு நபருக்கு அவ்விருதை வழங்க முடியும். 2017ஆம் ஆண்டு இலங்கை சங்கீத கலைக்காக டபிள்யூ.டி. அமரதேவாவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, டி.பி. விஜேதுங்க மற்றும் ஆதர் சி. கிளார்க், லக்ஷ்மன் கதிர்காமர், ஏ.ரி. ஆரியரத்ன, லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், கிறிஸ்டோபர் வீரமந்திரி ஆகியோரும் ‘ஸ்ரீ லங்காபிமானி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர் .

கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ விருது; வழங்கினார் ஜனாதிபதி! | Sri Lankaphimani For Karu Jayasuriya

இதன்போது உரையாற்றிய முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய,

நாம் இச்சந்தர்ப்பத்தில் இனவாதப் போராட்டமன்றி, தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கும் பணியையே மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். 75 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்து பெருமைமிக்க நாட்டை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க ஒன்றிணையுமாறு ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் அனைவரிடமும் அவர் கேட்டுக் கொண்டார்.

தனது அரசியல் வாழ்வில் எக்காலத்திலும் தான் யாரையும் விமர்சிக்கவில்லை என சுட்டிக்காட்டிய அவர், சட்டத்திற்குப் புறம்பாக எவ்விதமான செயல்களையும் தான் செய்ததில்லை என்றும் குறிப்பிட்டார். புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் முயற்சியின் பலனாக, ஓமல்பே சோபித தேரர் முன்வைத்த நீதி மற்றும் நியாயத்திற்காக தனது அரசியல் வாழ்க்கையை அர்ப்பணித்ததாகவும், இந்த ‘ஸ்ரீ லங்காபிமானி’ தேசிய விருது தான் பின்பற்றிய கொள்கைகளுக்கு வழங்கிய கௌரவமாகும் என்றும் தெரிவித்தார்.

கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ விருது; வழங்கினார் ஜனாதிபதி! | Sri Lankaphimani For Karu Jayasuriya

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியேற்றதன் பின்னர் மேற்கொண்ட அழைப்பின் பேரிலேயே அவர் அரசியலுக்கு வந்ததை நினைவுகூர்ந்த கரு ஜயசூரிய, அதன் மூலம் பொதுமக்களுடன் இணைந்து செயற்படக் கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

நகரபிதா என்ற வகையில் கொழும்பு நகரசபையில் புதிய கலாசாரத்தை உருவாக்க முடிந்ததாகவும் அதன் வெற்றி சர்வதேச ரீதியில் கூட அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன, வஜிர அபேவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் ஆளும்கட்சி அமைச்சர்கள், மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கரு ஜயசூரிய அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US