லண்டனில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையர்; பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு
லண்டனில் ஓரினச்சேர்க்கையாளரான 50 வயது மதிக்கத்தக்க இலங்கையரின் மரணம் தொடர்பில் கொலையாளி குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 20,000 பவுண்ட் சன்மானம் வழங்கப்படும் என அந்நாட்டு பொலிசார் அறிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் East End-ல் Kankanamalage என்பவர் பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் திகதி Tower Hamlets Cemetery பூங்காவில் மர்மமான முறையில் உயிரிழந்துகிடந்தார்.
பொலிசார் அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்த போது, பிரேதபரிசோதனை அறிக்கையில், இவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்த பயங்கர கொலை சம்பத்தால் LGBT+ சமூகத்தினரிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதோடு அவரை கொலை செய்த கொலையாளியை அடையாளம் காணுபவர்களுக்கு 20,000 பவுண்ட் (இலங்கை மதிப்பில் 54,46,895 ரூபாய்) சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவம் நடந்த போது, அப்பகுதியில் இருந்த 2 பேர் சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் புகைப்படங்களையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
ம்ேலும் இவரின் மறைவுக்கு அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் Let Voice Be Heard என்ற மனித உரிமைகள் குழு நேற்று ஊர்வலம் நடத்தியது. இந்தக் குழு பிரித்தானியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த LGBT அமைப்பினருக்காக பிரச்சாரம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இதனை தொடர்ந்து Let Voice Be Heardன் நிறுவனர் Maksudul Haque கூறியதில்
“பாலின குற்றங்கள் நாளுக்கு நாள் சமூகத்தில்அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்காக மக்கள் குரல் எழுப்ப வேண்டும்.
மேலும் இது ஒரு முக்கிய பிரச்சனை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அதிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை அவர்களின் தாய், தந்தை உறவினர்கள் அனைவரும் வெறுக்கின்றனர்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
லண்டனில் உள்ள பூங்கா ஒன்றில் சடலமாக கிடந்த இலங்கையர்!

