உக்ரைன் - ரஷ்யா போரில் கூலிப்படையாக இலங்கையர்கள்... 400 முறைப்பாடுகள்
உக்ரைன் - ரஷ்யா யுத்தத்தில் கூலிப்படை நிறுவனங்களால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குடிமக்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 400 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இலங்கையை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்கள் உக்ரைனில் போரிடுவதற்காக கடத்தப்படுவதாக வந்த தகவல்கள் தொடர்பாக அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்குப் பதிலடியாக, ரஷ்யாவுக்காக முதன்மையாகப் போரிடும் முன்னாள் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் கொடிய நிலைமைகளை, திரும்பி வந்த சிலர் அம்பலப்படுத்தியதை அடுத்து, பாதுகாப்பு அமைச்சகம் குடும்ப உறுப்பினர்களுக்கு முறைப்பாடுகளை அளிக்க அவசர அழைப்பு ஒன்றை அமைத்தது.
அதன்மூலம் இதுவரை மொத்தம் 411 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா மோதலில் பாதுகாப்புப் படையின் முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி ராணுவப் பயிற்சி ஏதும் இல்லாத குடிமக்களும் கூலிப்படையாக இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.