இந்தியாவின் ஹோட்டல் அறைக்குள் சடலமாக இலங்கை பெண் ; நடந்தது என்ன?
இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற இலங்கை பெண் ஒருவர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஸ்ரவஸ்தி மாவட்டத்திலுள்ள ஹோட்டலில் 71 வயதான இலங்கைப் பெண் ஒருவரே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பெண் கொழும்பிலிருந்து புத்த மத தலங்களைப் பார்வையிட சென்ற 46 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவில் அவர் ஒருவராக இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் குறித்த பெண் தனது ஹோட்டல் அறையில் இருந்து நீண்ட நேரம் வெளியே வராமையினால் ஏனைய சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்து இதனையடுத்து ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் அறையைத் திறந்தபோது, அந்தப் பெண் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன் பிரேத பரிசோதனைக்கு அமைய, இயற்கை மரணம் என தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக முறையான முறைப்பாடுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை, மேலும் சுற்றுலா குழு உயிரிழந்த பெண்ணின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.