யாழில் நோயாளியுடன் விபத்தில் சிக்கிய அம்புலன்ஸ் ; நூலிழையில் தப்பிய உயிர்கள்
யாழ்ப்பாணத்தில் நோயாளர் காவு வண்டி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு ஏற்றி சென்ற நோயாளர் காவு வண்டி நாவற்குழி பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.

பொலிஸார் விசாரணை
குறித்த விபத்தின் போது வாகனம் சேதமடைந்த நிலையில் , வாகனத்தினுள் இருந்த நோயாளிக்கோ , மருத்துவ உதவியாளர்கள் சாரதிக்கோ காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து சம்பவத்தினை அடுத்து , சம்பவ இடத்திற்கு பிறிதொரு நோயாளர் காவு வண்டி அழைக்கப்பட்டு , நோயாளியும் , மருத்துவ உதவியாளரும் வைத்தியசாலைக்கு சென்றனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.