சுவிட்சர்லாந்தில் இலங்கை பெண்ணை சினிமா பாணியில் கொலை செய்த கணவன்
சுவிட்சர்லாந்தில், இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணை கொலை செய்த கணவன் மற்றும் அவரது சகோதரர்க்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, கணவனுக்கு 19 வருடம் சிறைத் தண்டனை, சகோதரருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் டிசினோ பகுதியில் வசித்து வந்த பெண், மர்மமான முறையில் உயிரிழந்தார்.
விசாரணையில் வெளிப்பட்டதாவது, குற்றவாளிகள் இயற்கை மரணம் என நாடகமாடி, இணைந்து கொலை செய்து கொண்டிருந்தனர்.

நீதிபதியின் விளக்கமாக, கணவனின் சகோதரர் பெண்ணின் கால்களை அழுத்தி பிடித்து, தலையில் பிளாஸ்டிக் பையை வைத்து சுமார் 10 நிமிடங்கள் மூச்சுத் திணறச் செய்து கொலை செய்தார்.
பின்னர், உடலை சரிசெய்து கட்டிலில் வைத்து இயற்கை மரணம் போலக் காட்டினர். அச்சம் மற்றும் நாடகமாடிய செயலில், கணவன் பாடசாலைக்கு சென்ற தனது மகளை வீட்டிற்கு அழைத்து வந்து, தாயை எழுப்பி சாப்பாடு எடுத்துக்க சொல்லியதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
ஆனால் மகள் தாயை தட்டி எழுப்பிய போது, அவர் மூச்சு அற்று கிடக்க, பின்னர் தந்தைக்கு அறிவித்தார். இதன் மூலம் உண்மை வெளிப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.
நீதிபதி தனது தீர்ப்பில், கணவனின் திட்டமிட்ட செயல் “ஒஸ்கார் விருதுக்கு தகுதி” வாய்ந்ததாகவும், கள்ளக்காதல் காரணமாக ஒருவர் உயிரிழந்தது மிகவும் கவலைக்குரிய சம்பவமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.