இலங்கை ஜனாதிபதிகளின் வெளிநாடு பறப்பு ; செலவுகளை அம்பலப்படுத்திய பிரதமர்
இலங்கையில் இந்நாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டார்.
இன்று (27) நடைபெற்ற பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய பிரதமர், ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார்.
செலவிடப்பட்ட பணம்
மஹிந்த ராஜபக்ஷ 2010 முதல் 2014 வரை - 3,572 மில்லியன் ரூபா
மைத்திரிபால சிறிசேன - 2015 முதல் 2019 வரை - 384 மில்லியன் ரூபா
கோத்தபய ராஜபக்ஷ - 2020 முதல் 2022 வரை - 126 மில்லியன் ரூபா
ரணில் விக்கிரமசிங்க - 2023 மற்றும் 2024 வரை - 533 மில்லியன் ரூபா
அநுர குமார திசாநாயக்க – செப்டம்பர் 2024 முதல் பெப்ரவரி 2025 வரை - 1.8 மில்லியன் ரூபா
அதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் 2013 ஆம் ஆண்டில் அதிகளவு செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 1,144 மில்லியன் ரூபா என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டினார்.