கொலை குற்றச்சாட்டில் கைதான இலங்கை அரசியல்வாதி ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் உறுப்பினர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம்
பொலன்னறுவை பகுதியில் நடந்த ஒரு கொலை தொடர்பாக அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட சிலர் மேற்கொண்ட தாக்குதலில் 4 பற்கள் உடைக்கப்பட்ட நபர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வரும் இந்த நிலையில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மற்றுமொரு நபர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
இதன் பின்னரே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.