ஆன் லைன் கேம்; சகோதரிகளான 3 சிறுமிகள் விபரீத முடிவு; பெற்றோர்களே அவதானம்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள 'பாரத் சிட்டி' குடியிருப்பு வளாகத்தில், இன்று (4) அதிகாலை 2:15 மணியளவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12, 14 மற்றும் 16 வயதுடைய மூன்று சகோதரிகள், தங்கள் குடியிருப்பு தொகுதியின் 9 ஆவது மாடியிலிருந்து வரிசையாகக் குதித்துள்ளனர்.

கொரியா தான் எங்களின் மிகப்பெரிய காதல்
பலத்த சத்தம் கேட்டு ஓடி வந்த பாதுகாவலர்களும் பெற்றோரும், அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விசாரணையில் இந்தச் சிறுமிகள் கொரிய கலாசாரம் மற்றும் கொரியன் லவ் கேம் ஆகியவற்றிற்குத் தீவிரமாக அடிமையாகியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுமிகள் எழுதிய 8 பக்க கடிதத்தில் "மன்னிக்கவும் அப்பா, கொரியா தான் எங்கள் உலகம், கொரியா தான் எங்களின் மிகப்பெரிய காதல்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.