உயிர் அச்சுறுத்தல் ;வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய முக்கிய பொலிஸ் அதிகாரி; பிரான்ஸ் இராணுவத்தில்!
கொழும்பு குற்றப்புலனாய்வு பொறுப்பில் இருந்த முக்கிய பொலிஸ் அதிகாரி துமிந்த ஜயதிலக, பாதாளகுழுக்களின் மரண அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டுக்கு தப்பியோடிய சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களை முன்னின்று அதிரடி நடவடிக்கைகளின் மூலம் இவருக்கு கொள்ளையர்களிடம் இருந்து கொலை அச்சறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
ஊடகங்களுக்கு அனுப்பிய காணொளி
இது தொடர்பில் இலங்கியில் உள்ள தென்னிலங்கை ஊடகங்களுக்கு அவர் காணொளி ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது பிரான்ஸில் உள்ள அவர் பிரான்ஸ் இராணுவத்தில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை இலங்கையில் உள்ள அவரது மனைவி பிள்ளைகள் மறைவான இடத்தில் பாதுகாத்துவிட்டே தான் பிரான்ஸிற்கு சென்றதாகவும் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக கூறியுள்ளார்.
தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான கஞ்சிபான இம்ரான் உள்ளிட்டோ அவருக்கு விடுத்த மரண அச்சுறுத்தல் காரணமாகவே தான் வெளிநாடு சென்றதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.