பிக்பாஸ் வீட்டிற்குள் காலடி பதித்த மற்றொரு இலங்கை நபர்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக்பொஸ் சீசன் 6 இன்று மாலை தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
1. ஜி.பி. முத்து : டிக்டொக் மூலம் பிரபலமாகி யூடியூபில் கலக்கிய ஜி.பி. முத்து தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.
2. அசீம் – சின்னத்திரை சீரியல் நடிகர்.
3. ஷிவின் கணேசன் – மொடலாக இருப்பவர். மிஸ் இந்தியா திருநங்கை பட்டம் வென்றவர்.
4. ரொ பர்ட் மாஸ்டர் – நடன இயக்குனர் 5 ஷெரினா – சினிமா நடிகை, தொழிலதிபர்.
6. ராம் ராமசாமி – பிரபல மொடல்.
7. தினேஷ் கனகரத்தினம் – இலங்கையை சேர்ந்த இசையமைப்பாளர்.
8. ஜனனி – ஊடகத்துறையில் பணியாற்றுபவர்.இலங்கையை சேர்ந்தவர்.
9. அமுதவாணன் –கொமெடி நடிகர்.
10. மகேஷ்வரி – வி.ஜே.யாக அறிமுகம் ஆனவர். தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.
11. கதிரவன் – பிரபல மொடல், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர்.
12. ஆயிஷா – சின்னத்திரையில் நடிகை.
13. மணிகண்டன் ராஜேஷ் – நடிகை ஐஷ்வர்யா ராஜேஷின் சகோதரர், சின்னத்திரை நடிகர்.
14. சாந்தி அரவிந்த் – நடிகை, நடன இயக்குனர்.
15. ரச்சிதா – நடிகை போட்டியாளர்கள் இவர்கள் தாம் என தகவல்கள் கசிந்துள்ள போதும்.
இவர்களில் எத்தனை பேர் உண்மையில் பிக்பொஸ் இல்லம் செல்கிறார்கள் என்பது இறுதிவரை சஸ்பென்சாகவே இருக்கும்.