இலங்கையின் பிரபல ராப் பாடகர் கைது!
இலங்கையின் பிரபல ராப் பாடகர் ஷான் புத்தா என்பவர் இன்று (14) துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 9 மி.மீ வகை துப்பாக்கியுடன் மீகொட அரலிய உயன பகுதியில் அவரை கைது செய்ததாக ஹோமாகம தலைமை பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபருக்கு துப்பாக்கியை வழங்கியதாக கூறப்படும் மன்னார் பொலிஸ் பிரிவில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும், சந்தேக நபரின் மேலாளர் என்று கூறப்படும் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மாத்தறை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய துப்பாக்கி சந்தேக நபரிடம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஷான் புத்தா வீட்டில் சோதனை நடத்தியபோது துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.