வெளிநாடொன்றில் இலங்கையரின் செயலால் அதிர்ந்த பொலிஸார்! சுற்றிவளைத்து கைது
ஜப்பானில் திங்கட்கிழமை பொது இடத்தில் கத்தியால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இலங்கையர் வாள் மற்றும் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கழுத்தில் இரத்தப்போக்கு காயங்கள்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மினாடோ-குவில் உள்ள ஷினகாவா நிலையத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றுக்கு வெளியே குறித்த இலங்கையர் அவரது கழுத்தில் கத்தியை அழுத்திக் கொண்டிருந்துள்ளார்.
இதனால், அவரின் கை மற்றும் கழுத்தில் இரத்தப்போக்கு காயங்கள் ஏற்பட்டன, ஆனால் அவர் மயங்கி விழவில்லை.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ஜப்பானிய பொலிஸார் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து, அவருடன் பேச்சுக் கொடுத்து கத்தியைச் கீழே போடும் படி கோரி கைது செய்துள்ளனர்.
எனினும் அவர் எதற்காக அப்படி நடந்துகொண்டார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.