இந்தியாவில் கைதான இலங்கை ஐஎஸ் பயங்கரவாதிகள்... ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளதா?
இந்தியாவில் கைதான இலங்கையை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் மேலதிக விசாரணைகளை நடாத்த குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 4 சந்தேக நபர்களும் மே 20 அன்று அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது, அந்த நான்கு பேருடன் தொடர்பில் இருந்த மேலும் இரு சந்தேக நபர்களை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதுடன், மற்றுமொரு சந்தேகநபரான ஒஸ்மன்ட் ஜெராட் என்பவரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்ய தகவல் அளிப்பவர்களுக்கு 2 மில்லியன் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களும் 'அபு பாகிஸ்தானி' என்ற போதகருடன் தொடர்பில் இருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் பஞ்சாப் எல்லைக்கு ஆயுதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.