இலங்கை தமிழர் இந்திரஜித்தின் நடிப்பால் சிரித்து சிரித்து மகிழ்ந்த சரிகமப இசை அரங்கம்!
தென்னிந்தியாவின் பிரபலான தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜி தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப இசை நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரோமோக்கள் வெளியாகி நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
மேலும், நேற்று 04-07-2024) வெளியான ப்ரோமோவில் நடுவர்களை போல விஜயலோஷனும், இந்திரஜித்தும் நடித்து காட்டி சரிகமப அரங்கத்தினை சிரிப்பில் மூழ்க விட்டிருந்தனர்.
கடைசியாக வந்த ப்ரோமோவில் ”இஞ்சி இடுப்பழகி” பாடலை பாடிய படி இந்திரஜித் அதை நடித்து காட்டுகின்றார்.
பார்த்த நடுவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
இதேவேளை, பாடுவது மட்டும் இல்லை, நடிப்பிலும் தனக்கு ஆர்வம் இருக்கு என்பதை அடிக்கடி இந்திரஜித் நிறுபித்து வருகின்றார்.