அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை யுவதி அனுபவித்த துயரங்கள்!
சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்று பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்கொண்ட மஹியங்கனை இளம் பெண் ஒருவர் புதன்கிழமை (03) நாடு திரும்பினார்.
மஹியங்கனை, தம்பனை, குருகும்புர கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஸ்வர்ணா மல்காந்தி என்ற யுவதியே நாடு திரும்பியவராவார்.
பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடி காரணமாக, அவர் தனது கிராமத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மூலம் சவூதி அரேபியா சென்று பணிப் பெண்ணாக பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில், கட்டுநாயக்க வந்தடைந்த குறித்த பெண் தெரிவிக்கையில், ‘நான் அதிகாலையில் எழுந்து இரவு வரை வேலை செய்வேன். அந்த வீட்டுப் பெண் மிகவும் கண்டிப்பானவர்.
அவர் எப்போதும் விரைவாக வேலை செய்ய வேண்டும் என என்னிடம் கூறுவார்.’ ‘ அந்த மேடம் என்னை அடிக்கடி அடிப்பார்.
எப்போதும் உதைப்பார். என் தலைமுடியைப் பிடித்து இழுத்து தரையில் தள்ளிவிடுவார். கடந்த நோன்புப் பெருநாள் தினத்தில் மேலும் இரண்டு வீடுகளில் நான் வேலை பார்க்க நேர்ந்தது.
பாலியல் வல்லுறவு
இதற்கிடையில், நான் மேடத்தின் அம்மா வீட்டில் வேலை செய்ய வேண்டியிருந்தது. அப்போது அவரது சகோதரர் எனக்கு பல்வேறு துன்புறுத்தல்கனைச் செய்தார் என காண்னீருடன் கூறிய பெண், ‘ஐந்து முறை நான் சுயநினைவை இழந்தேன். அந்தச் சந்தர்ப்பங்களில் அவர் என்னிடமிருந்து தனது தேவைகளை பூர்த்தி செய்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை குவைத்துக்கு பணிப்பெண்களாக செல்லும் இலங்கைப்பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக விற்பனை செய்யப்படுவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
அதனை மெய்ப்பிப்பது போல சவூதி அரேபியாவில் ஸ்வர்ணா மல்காந்தி கடும் பாலியல் தொல்லைகளையும் , சித்திரைவதைகளையும் அனுபவித்துள்ளதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.