ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ; 200க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி !
ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 200க்கும் மேற்பட்ட பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
புதன்கிழமை (10) இரவு சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் குளிரூட்டி அமைப்பில் கோளாறு ஏற்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் விமானத்திலேயே இருந்த பயணிகள் அனைவரும் பின்னர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ
போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானத்துடன் இயக்கப்படும் விமானம் AI2380, டெல்லி விமான நிலையத்திலிருந்து இரவு 11 மணியளவில் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் விமானத்தின் குளிரூட்டி அமைப்பு மற்றும் மின்சாரம் செயலிழப்பினால் மேற்கண்ட நிலைமை ஏற்பட்டது.
சுமார் இரண்டு மணி நேரம் விமானத்தில் அமர்ந்திருந்த பின்னர், அனைத்து பயணிகளும் இறக்கிவிடப்பட்டு விமான நிலைய கட்டிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சமூக ஊடகங்களில் இது தொடர்பில் பகிரப்பட்ட வீடியோ கட்சிகள், பயணிகள் விமானத்துக்குள் அவசதிப்படுவதை காட்டியது.