2021ல் இலங்கையர்கள் அதிகமானோர் வேலைக்காக சென்ற வெளிநாடு எது தெரியுமா?
கடந்த ஆண்டில் (2021) 120,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இதில், கட்டாருக்கே அதிகளவான இலங்கையர்கள் வேலை தேடி சென்றுள்ளதாக இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி கடந்த வருடம் (2022) சுமார் 30,000 இலங்கையர்கள் கத்தாருக்கு வேலைக்காக சென்றுள்ளனர்.
சவூதி அரேபியாவுக்கு 27,000 பேர் சென்றுள்ளனர், கிட்டத்தட்ட 20,000 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வேலைக்காகச் சென்றுள்ளனர்.
மேலும், 1,600 நபர்கள் சைப்ரஸுக்குச் சென்றுள்ளதாகவும், 1,400 பேர் தென் கொரியாவிற்கு சென்றுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.