உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப்படவுள்ள கிரிக்கெட் வீரர்!
கொழும்பு காலி முகத்திடலில் 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் (Dhammika Prasad) ஆரம்பிக்கவுள்ளார்.
இந்த போராட்டமானது நாளை வெள்ளிக்கிழமை (15-04-2022) ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலிமுகத்திடல் நாளை காலை போராட்டக்காரர்களுடன் இணைந்து ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கும் நீதி வழங்குமாறு இந்த நாட்டின் தலைவர்களை வலியுறுத்தி 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன் என தம்மிக தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கடந்த வாரம் கட்டுவாப்பிட்டியில் இருந்து கொச்சிக்கடை தேவாலயம் வரை தம்மிக்க பிரசாத் ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.