இலங்கையில் குடியுரிமை...தமிழ்நாட்டில் ஓட்டு போட்ட இலங்கை தம்பதி கைது
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இலங்கை குடியுரிமை பெற்ற தம்பதி, தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போட்டிருந்தது தெரிய வந்தை அடுத்து அவர்கள் கைது செய்யப்படுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பிற நாடுகளில் குடியுரிமை பெற்று, தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்ததாக ஏற்கெனவே 25 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இலங்கை தம்பதியினர் சிக்கியிருக்கின்றனர்.

இருவரும் இலங்கை குடியுரிமை
இன்று காலை இலங்கையை சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது சபீர் மற்றும் அவரது மனைவி அமீனா பேகத்திடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது அவர்கள் கையில் ஒட்டு போட்டதற்கான சான்றாக வைக்கப்படும் கருப்பு மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இருவரும் இலங்கை குடியுரிமை பெற்து தெரிய வந்திருக்கிறது.
இருப்பினும், தமிழ்நாடு முகவரியில் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருந்திருக்கின்றனர். எனவே விமான நிலைய அதிகாரிகள் அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.
தகவலின் பேரில் போலீசார் இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் வெளிநாட்டு குடியுரிமை பெற்று தமிழ்நாட்டில் வாக்களித்தது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விரசாரணைக்கு உட்படுத்தி வருவதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.