இலங்கை முன்னணி தொழிலதிபர் ஹரி ஜயவர்தன காலமானார்
இலங்கையின் முன்னணி தொழிலதிபர் ஹெரி ஜயவர்தன தனது 82வது வயதில் காலமானார்.
ஹெரி ஜயவர்தன என்று பிரபலமாக அறியப்படும் டொன் ஹரோல்ட் ஸ்டாசன் ஜயவர்தன, Melstacorp PLC யின் தலைவராகவும், டென்மார்க்கிற்கான இலங்கை தூதுவராகவும் பணியாற்றியவர் ஆவார்.
1977 ஆம் ஆண்டு ஸ்டெஸ்ஸன் க்ரூப் என்ற பெயரில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்த அவர்,பின்னாளில் முன்னணி தொழிலதிபராக திகழ்ந்தார்.
இலங்கையின் பணக்காரர்களில் ஒருவராக ஜெயவர்தனவை Forbes பட்டியலிட்டிருந்தது.
அமெரிக்காவிற்கு வெளியே சிறப்பாக நிர்வகிக்கப்படும் நிறுவனங்களின் Forbes பட்டியலில் பட்டியலிடப்பட்ட முதல் இலங்கை நிறுவனங்களான Distilleries Company of Sri Lanka மற்றும் Aitken Spence ஆகிய இரண்டின் தலைவராகவும் ஜயவர்தன பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.