பரீட்சைக்காக வற்புறுத்திய தந்தை ; சினிமா பாணியில் மகன் நிகழ்த்திய கொடூரம்,பயத்தில் மகள் செய்த செயல்
உத்தரப்பிரதேசத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற அழுத்தம் தந்த தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் லக்னோவைச் சேர்ந்தவர் மன்வேந்தர் சிங். 49 வயதான இவர் மருந்து மற்றும் மதுபான விற்பனை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

உடல் பாகங்கள்
இவரின் மகன் அக்சத் பிரதாப் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வந்தார். மகள் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 9 ஆண்டுகளுக்கு முன்பு மன்வேந்தர் சிங்கின் மனைவி மரணமடைந்தார்.
இந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி முதல் தனது தந்தையை காணவில்லை என்று அக்சத் பிரதாப் புகார் கொடுத்துள்ளார். அத்துடன், தனது தந்தை பயன்படுத்திய 3 செல்போன்களும் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இது தொடர்பாக சம்பவத்து அன்று அதிகாலையில் தனது மகனை மன்வேந்தர் திட்டியுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த அக்சத் பிரதாப், வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து தந்தையை சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் உடல் பாகங்களை பல துண்டுகளாக வெட்டி, நீள நிற டிரம்மில் அடைத்துள்ளார்
அதில், தலையை மட்டும் துண்டித்து காரில் எடுத்துச் சென்று வீசியுள்ளார்.பின்னர், வீட்டில் சோதனை செய்த பொலிஸார் அங்கிருந்த டிரம்மை கைப்பற்றினர். மேலும், தந்தையை தனது தங்கையின் கண் முன்னே அக்சத் பிரதாப் சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
உண்மையை வெளியே சொன்னால் உன்னையும் தீர்த்துக் கட்டிவிடுவேன் என துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். உயிர் பயத்தில் அது தொடர்பாக சிறுமி யாரிடமும் வாய் திறக்காமல் இருந்துள்ளார்.
போட்டித் தேர்வுக்கு தயாராக கூறி அழுத்தம் கொடுத்த தந்தையை பெற்ற மகனே சுட்டுக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் அடைத்த சம்பவம் உத்தர பிரதேசத்தையே உலுக்கியுள்ளது.