யாழில் அதிக போதையால் 29 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 29 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை முடிவுகளின்படி, இந்த உயிரிழப்பு அதிக போதை பாவனையால் ஏற்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன், முன்னதாக சிறு குற்றச் செயல்களுக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டு, சில நாட்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களுடன் போதை பொருள்களை நுகர்ந்த நிலையில், அதீத போதை காரணமாக சுகவீனம் ஏற்பட்டதாக பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, உயிரிழந்த இளைஞனுடன் சம்பவ தினத்தன்று போதை பாவனைக்கு உட்பட்ட மற்றவர்களை பற்றியும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.