இலங்கையரின் தாக்குதலையடுத்து நியூஸிலாந்தின் அதிரடி முடிவு!
நேற்றையதினம் நியூஸிலாந்தின் ஒக்லேன்ட்டிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, தீவிரவாதத்திற்கு எதிரான சட்டங்களைக் கடுமைப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகவலை நியூஸிலாந்துப் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டர்ன் (Jacinda Ardern) கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இந்த தாக்குதலை நடத்தியிருந்ததாகவும், அவர் ஐ.எஸ் தீவிரவாதக் குழு மீதுஅதிகம் ஈர்க்கப்பட்டவர் என்றும் விசாரணையில் தெரியவந்திருந்தது.
மேலும் சந்தேக நபரின் தாக்குதலையடுத்து நியூஸிலாந்து பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.
https://jvpnews.com/article/sri-lankan-attack-new-zealand-exciting-information-1630736029