பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்த இலங்கை வீராங்கனை சுஃபியா மிக்
இந்தியாவின் ராஞ்சியில் இன்று (26) நடைபெறும் 4வது தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இலங்கை வீராங்கனை சஃபியா யமிக் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தப் போட்டியை 23.58 வினாடிகளில் முடித்து புதிய சாதனை படைத்தார்.
27 ஆண்டுகளுக்கு முன்பு, 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் பி.டி. உஷா படைத்த சாதனையை அவர் முறியடித்தார்.

அத்துடன் சஃபியா யமிக் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தெற்காசியாவின் வேகமான தடகள வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றதுடன், 4x100 மீட்டர் அஞ்சல் ஓட்டப்போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அவர் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 11.53 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கம் வென்றார்.
அதன்படி, இந்த செம்பியன்ஷிப்பில் சஃபியா யமிக் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.