அபார வெற்றி... ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இலங்கை!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இறுதி டி20 போட்டியில் இலங்கை அணி 09 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி 14.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுகொண்டது.
ஜிம்பாப்வே அணி சார்பில் Brian Bennett அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுக்களையும், ஏஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 83 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 10.5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் வெற்றியை பெற்றது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் மற்றும் குசல் மெந்திஸ் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காது 15 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். அதன்படி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.