ஏஞ்சலோ மேத்யூஸ் என்ட்ரி: இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியை ஈட்டிய இலங்கை!
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டியுள்ளது.
இன்றைய தினம் (26-10-2023) பெங்களூருவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 33.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43 ஓட்டங்களையும் ஜானி பேர்ஸ்டோவ் 30 ஓட்டங்களையும் டேவிட் மாலன் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும் கசுன் ராஜித, ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் 157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 25.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பாத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிக்காமல் 77 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களை பெற்றார்.
இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் டேவிட் வில்லி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.