கொழும்பில் நள்ளிரவில் இடம்பெற்ற துப்பாக்கிசூடு ; ஒருவர் பலி இரு சிறார்கள் மருத்துவமனையில்
கொழும்பு - ஜிந்துபிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
முன்னதாக ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் 44 வயதுடைய ஆண் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காயமடைந்த மற்றைய இருவரும் சிறுவர்கள் என்பதுடன் அவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குறித்த சிறுவர்கள் 3 மற்றும் 4 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
இதேவேளை சந்தேகநபர்கள் முச்சக்கர வண்டியில் சென்று துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.