திருமணத்திற்கு லேட்டா போன போட்டோகிராபர்; கேஸ் போட்டு பணம் பிடுங்கிய ஜோடி!
இந்தியா -கர்நாடகாவில் தங்களின் திருமணத்திற்கு 70 நிமிடங்கள் தாமதமாக வந்த புகைப்படக் குழு மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஒரு திருமண ஜோடி ரூ.35,000 இழப்பீடு பெற்ற சம்பவம் சமூக வலைத்தளங்க்களில் பேசுபொருளாகியுள்ளது.
திருமணம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் தற்போது புகைப்படங்களும், வீடியோக்களும் எடுக்கப்படுவது தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஏனெனில் அவற்றை மலரும் நினைவுகளாக பலரும் பத்திரப்படுத்தி வைப்பதுண்டு.

திருமண ஜோடிக்கு ரூ.35,000 இழப்பீடு
இப்போதெல்லாம் ப்ரீ வெட்டிங் சூட் என்கிற பெயரில் திருமணத்திற்கு முன்பு கணவனும், மனைவியும் அரைகுறை ஆடைகளை அணிந்து ஆபாசமாக போஸ் கொடுத்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுப்பதும் டிரெண்டிங் ஆகிவிட்டது.
குறிப்பாக கேரளாவில் இது அதிகம் நடக்கிறது. இந்நிலையில்தான் தங்களின் திருமணத்திற்கு 70 நிமிடங்கள் தாமதமாக வந்த புகைப்படக் குழு மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஒரு திருமண ஜோடி ரூ.35,000 இழப்பீடு பெற்ற சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
]
குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் சில சடங்குகள், மணமகனின் வருகை உள்ளிட்டவற்றை வீடியோ எடுக்க முடியவில்லை எனவும், இது குறித்து முன்னதாகவே தெரிவிக்கப்படவில்லை எனவும் அந்த திருமண ஜோடி மனுவில் குறிப்பிட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.