நாடு இன்னும் மிகவும் கீழே தான் இருக்கிறது! அமைச்சர் தகவல்
மத்திய வங்கியினால் கடந்த மாத இறுதியில் இலங்கையின் கையிருப்பு 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அறிவிக்கப்பட்டதாகவும், கையிருப்பு தொகையை கருத்திற்கொண்டால் இலங்கை இன்னமும் மிகவும் கீழே இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சிக் சியம்பலாபிட்டிய (Rajith Siyabalapitiya) தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்த பெறுமதியை 5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்ப்பதாக தெஹியோவிட்டவில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் அவர் தெரிவித்தார்.
டொலரின் மதிப்பு தேவை மற்றும் விநியோகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அரசு இதை தேவையில்லாமல் கட்டுப்படுத்த முயன்றதில்லை. 360 முதல் 380 ரூபாயாக இருந்த டொலர், தற்போது 320 ஆக குறைந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பிரீமியம் பெறுவது நமது கையிருப்பு அதிகரிக்க ஒரு காரணம் எனத் தெரிவித்திருந்தார்.