இலங்கையின் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பு!
நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 73 முக்கிய குளங்களில் 49 குளங்கள் நிரம்பி வழியும் நிலையை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மல்வத்து ஓயாவின் தாழ் நிலப்பகுதிகளில் சிறியளவான வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் தொடர்ந்து நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக, பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன.