செவ்வாய் - சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் ; பண மழை கொட்ட போகும் ராசிக்காரர்கள்
சந்திரன் மார்ச் 16 ஆம் திகதி சனி பகவானின் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.இதனால் கும்ப ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த சுப யோகத்தால் மகாலட்சுமியின் ஆசியால் நல்ல நிதி நன்மைகளைப் பெறவுள்ளனர். இப்போது கும்ப ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யர் என்பதைக் காண்போம்.

| மேஷம் | மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். உடன் பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும் மற்றும் அவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். அதுவும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். |
| சிம்மம் | சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இதன் மூலம் நிதி நிலையில் உயர்வு ஏற்படும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தாலோ அல்லது வேலையை தேடிக் கொண்டிருந்தாலோ, அவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். மன அழுத்தம் குறைந்து, மன அமைதி கிடைக்கும். |
| கும்பம் | கும்ப ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் சந்திரனின் சேர்க்கையல் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆராய்ச்சி, மருத்துவம், ஐடி துறையில் இருப்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இதுவரை சந்தித்து வந்த மன அழுத்தம் குறைந்து, மன ஆரோக்கியம் மேம்படும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். |