தமிழர் பகுதியொன்றில் தீயிட்டு அழிக்கப்படவுள்ள பெருந்தொகை ஆபத்தான பொருட்கள்
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது கைப்பற்றப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த பெருமளவிலான போதைப்பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று (13) காலை முன்னெடுக்கப்படவுள்ளன.
அதற்கமைய, 40 கிலோகிராம் 533 கிராம் ஹெரோயின், 132 கிலோகிராம் 79 கிராம் கஞ்சா, 55 கிராம் கொக்கெய்ன், 3,482 போதை மாத்திரைகள் என்பன தீயிட்டு அழிக்கப்படவுள்ளன.

தீயிட்டு அழிப்பு
இந்த போதைப்பொருள் கையிருப்பு இன்று காலை 06.00 மணியளவில் கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் இருந்து பாதுகாப்புடன் புத்தளம், வன்னதவில்லுவ - லெப்டோவத்த பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு நிறுவப்பட்டுள்ள நவீன தகன உலை மூலம் இன்று காலை 09.00 மணியளவில் அவை அனைத்தும் தீயிட்டு அழிக்கப்படவுள்ளன.