உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்
உலகளவில் கடவுச்சீட்டுகளின் பலம் மற்றும் விசா அணுகலைத் துல்லியமாக மதிப்பிடும் 'பாஸ்போர்ட் ரிப்போர்ட்ஸ்' (Passport Reports) தளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, சர்வதேச அளவில் இலங்கையின் கடவுச்சீட்டு 169ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கையின் கடவுச்சீட்டு 53 நகர்வு மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

இலங்கை கடவுச்சீட்டு
இதன் மூலம் இலங்கை கடவுச்சீட்டு வைத்துள்ளவர்கள் 15 நாடுகளுக்கு விசா இன்றியும், 34 நாடுகளுக்கு வருகைக்கால விசாவிலும், 4 நாடுகளுக்கு மின்னணு பயண அனுமதி (ETA) மூலமாகவும் பயணம் செய்ய முடியும்.
இருப்பினும், 145 நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு முன்பாக விசா பெற வேண்டியது கட்டாயமாகும்.
இந்த பட்டியலில், ஐக்கிய அரபு இராச்சியம் உலகளவில் முதலிடத்தைப் பிடித்து மிகச் சிறந்த கடவுச்சீட்டாக உருவெடுத்துள்ளது.
சிங்கப்பூர் 2ஆம் இடத்தையும், ஸ்பெயின் 3ஆம் இடத்தையும், மலேசியா 4ஆம் இடத்தையும், லக்சம்பர்க் 5ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.
பிராந்திய நாடுகளின் தரவரிசையில்,இந்தியா 131ஆவது இடத்திலும், சீனா 97ஆவது இடத்திலும், ரஷ்யா 75ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 183ஆவது இடத்திலும் உள்ளன.