சுற்றுலாத் துறைக்காக அபிவிருத்தி செய்யப்படும் இலங்கையின் முக்கிய நகரம்
சுற்றுலாத் துறையை மையப்படுத்தி எதிர்வரும் சில வருடங்களில் கண்டி நகரை அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கண்டி நகரின் அபிவிருத்தி குறித்து, அண்மையில் நடைபெற்ற கண்காணிப்பு மற்றும் கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தென் ஆசியாவின் மிகப் பெரிய கட்டிடமாகக் கருதப்படும், கண்டி போகம்பர சிறைச்சாலை வளாகத்தை அபிவிருத்தி செய்வது இத்திட்டத்தின் பிரதான குறிக்கோள் என்றும் பிரதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, மகாநாயக்க தேரரின் அறிவுறுத்தல்களின்படி தொல்பொருள் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து இது தொடர்பான திட்டங்களைத் தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.