செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் பதவியை துறந்தாரா!
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரும், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகன் தொடர்பில் பல்லரும் அறிந்திருப்பார்கள்.
சைவப்பணியும் அறப்பணியும் தன் வாழ்வின் இலட்சியமாக கொண்டு வாழ்ந்து வருபவர் தான் கலாநிதி ஆறு திருமுருகன் ஆவார். ஈழத்தை தாண்டி , புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் ஆறு திருமுருகன் அவர்கள் வெகு பிரபலமானவர்.
ஆண்டன் அடிக்கு தன் வாழ்வை அற்பணித்த ஓர் வள்ளல் என கூறினால் அது மிகையாகாது. தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவராக உள்ள இவரது நிழலில் பல்வேறு சிறப்பான பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை எல்லோரும் அறிந்த விடயம் .
பல ஏழை மாணவர்களுக்கு அழியாத செல்வமாகிய கல்வியினை கிடைக்க செய்து அவர்களின் வாழ்வினை வளப்படுத்தும் அரிய பணியினை இவர் செய்து வருகின்றார்.
இந்நிலையில் ஆறு திருமுருகன் அவர்கள் , தான் கடந்து வந்த பாதைகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.