இலங்கையின் எரிபொருள் நெருக்கடி ; ஜனாதிபதி முக்கிய வெளியிட்ட தகவல்
மத்திய கிழக்கில் மோதல்கள் நடந்து கொண்டிருந்தாலும், இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதனை குறிப்பிடடுள்ளார்.

எரிபொருள் கையிருப்பு
இது தொடர்பில் மேலும் கருத்துரைத்த அவர்,
இலங்கையில் அடுத்த 33 நாட்களுக்கு போதுமான டீசல் மற்றும் அடுத்த 27 நாட்களுக்கு பெட்ரோல் கையிருப்பில் உள்ளதாகவும் மார்ச் 07 அல்லது 08 ஆம் திகதிகளில் எரிபொருட்கள் கொண்ட கப்பல் இலங்கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் இப்போதைக்கு எரிபொருள் பற்றாக்குறை இல்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும் போர் தீவிரமடைந்தால், அரசாங்கம் கண்காணித்து அதற்கேற்ப பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் தற்போது நிலவும் மோதலால் இலங்கைக்கு ஏற்பட்ட தாக்கம் குறித்த அறிக்கைகளைத் தொகுத்து, பாதிப்பை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளன என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.