விமான சேவைகள் தொடர் ரத்து; வெறிச்சோடிய சென்னை விமான நிலையம்
ஈரான் - இஸ்ரேல் போரால் பல நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போர் பதற்றம் காரணமாக சென்னையில் கடந்த 28ஆம் தேதி முதல் துபாய் அபுதாபி, பக்ரைன், மஸ்கட் செல்லும் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகள் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

மூன்றாவது நாளாக விமான சேவைகள் ரத்து
இன்றோடு சேர்த்து 36 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது இந்நிலையில் மூன்றாவது நாளான இன்றும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக துபாய், அபுதாபி, சார்ஜா, மஸ்கட் உள்ளிட்ட நாட்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இது இவ்வாறு இருக்க , அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யவும் பயணிகளும் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு பயணம் தொடர்பான தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அணுஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் போரை துவங்கியுள்ளன.
தாக்குதலில் ஈரானிய தலைவர் கமேனி உயிரிழந்த நிலையில் இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமாக இடம்பெற்றும் வரும் உலக நாடுகளில் பெரும் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.