ராஜபக்ச குடும்பத்திற்கு மூத்த சகோதரர் இந்தியாவாம்; நாமலின் புதிய உறவு
பல ஆண்டுகளாக இலங்கையின் மூத்த சகோதரராகவும், நல்ல நண்பராகவும் இந்தியா இருந்து வருவதாக முன்னாள் அமைச்சர் நமல் ராஜபக்ச ந்ன்றி தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு, பல தவணைகளில், 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இது தவிர பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு அரிசி, மருந்துகள் உள்ளிட்டவை மானியமாக வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் தமிழக அரசின், 90 லட்சம் கிலோ அரிசி, 20 ஆயிரம் கிலோ பால் பவுடர், 25 ஆயிரம் கிலோ மருந்துகள் மற்றும் இதர மருத்துவப் பொருட்களுடன் சென்ற கப்பல், நேற்று கொழும்பு துறைமுகத்தை அடைந்தது.
Grateful to HE PM @narendramodi, Hon CM @mkstalin & the people of India ?? for the aid & essential items sent to #LKA. India certainly has been a big brother & a good friend to #LKA throughout the years, something that we will never forget! Thank you ?? @IndiainSL
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 23, 2022
இது குறித்து முன்னாள் அமைச்சர் நமல் ராஜபக்சே கூறுகையில், இலங்கைக்கு அத்தியாவசிய பொருள்கள், நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பல ஆண்டுகளாக இலங்கையின் மூத்த சகோதரராகவும், நல்ல நண்பராகவும் இந்தியா இருந்து வருகிறது. இதை எங்களால் மறக்க முடியாது என நமல் ராஜபக்ச கூறியுள்ளார்.