பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜயை சீண்டிய விஜய் சேதுபதி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய பேச்சுக்கள் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விஜய் தொலைக்காட்சி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தின்படி, பிக்பாஸ் தமிழ் சீசன் 10 என்பது அதன் கட்டமைக்கப்பட்ட வடிவம், பிரத்யேக கருப்பொருள்கள் மற்றும் விளையாட்டு சூழலுக்குள் மட்டுமே நடத்தப்படும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி அறிக்கை
மேலும், நிகழ்ச்சியில் இடம்பெறும் சூழ்நிலைகள், உரையாடல்கள் மற்றும் வெளிப்பாடுகள் அனைத்தும் அந்தந்த தருணங்களின் கதைப்போக்கிற்கு உட்பட்டவையே தவிர, அவற்றை நிகழ்ச்சிக்கு வெளியில் உள்ள எந்தவொரு நபர், அமைப்பு, சித்தாந்தம் அல்லது சூழ்நிலைகளுடன் தொடர்புபடுத்தி பார்க்கக் கூடாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நிகழ்ச்சிக்கு அப்பாற்பட்ட எந்தவொரு விளக்கமும் அல்லது தொடர்பும் தங்களால் உத்தேசிக்கப்பட்டதும் இல்லை, அங்கீகரிக்கப்பட்டதும் இல்லை என்றும் விஜய் டிவி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது