இலங்கையில் படிப்படியாக வீழ்ச்சியடையும் பிறப்பு வீதம்
இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக சிறுவர் நோய் நிபுணர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுனில் விஜேசிங்க இது குறித்துக் கூறுகையில், மூன்றரை இலட்சமாகக் காணப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை தற்போது இரண்டரை இலட்சமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

குழந்தை பிறப்பு
மேலும், அச் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் பூஜித விக்கிரமசிங்க தெரிவிக்கையில், குழந்தை பிறப்பை எதிர்பார்க்கும் தாய் தனது உயரத்திற்கு ஏற்ற எடையை முறையாகப் பேணுவது மிகவும் முக்கியமானது என்றார்.
நீரிழிவு நோய் அல்லது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ள கர்ப்பிணித் தாய்க்குப் பல்வேறு சிக்கல்களுடன் குழந்தைகள் பிறக்கின்றன. சரியான எடை மற்றும் அந்த எடைக்கு ஏற்ற உயரத்தைக் கொண்ட ஒரு பெண் கர்ப்பமடைவதே இதற்கான அடிப்படை அடித்தளமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.