உலக நாணயங்களில் இலங்கை ரூபாவுக்கு கிடைத்துள்ள இடம்
அமெரிக்காவின் ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் ஸ்டீவ் ஹன்கே தரப்படுத்தலுக்கு அமைய உலகில் பெறுமதி குறைந்த நாணயங்களில் இலங்கையின் ரூபா மூன்றாவது இடத்தில் உள்ளது.
கடந்த ஏழு மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் மதிப்பு 47.79 வீதமாக வீழ்ச்சி
இதனடிப்படையில், கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த 16 ஆம் திகதி வரையான காலத்திற்குள் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 47.79 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
தரப்படுத்தலுக்கு அமைய முதலிடத்தில் சிம்பாப்வே நாணயம் இருப்பதுடன் இரண்டாம் இடத்தில் கியூபாவின் நாணயம் உள்ளது.
Ghana's economic death spiral continues to spin and spin. The Ghanaian cedi has depreciated against the USD by 38.76% since Jan 2022, which is why #Ghana takes the 6th place in this week's Hanke’s #CurrencyWatchlist. Without a currency board, GHA economy and the cedi are tanking pic.twitter.com/elwOMvMT2x
— Steve Hanke (@steve_hanke) September 21, 2022
ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த 16 ஆம் திகதி வரையான காலத்தில் சிம்பாப்பேவில் பயன்படுத்தப்படும் ஆர்.டி.ஜீ டொலரின் பெறுமதியானது அமெரிக்க டொலருக்கு நிகராக 73.33 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கியூபாவின் பேசோ நாணயம் அமெரிக்க டொலருக்கு நிகராக 57.65 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.